கணவரைப் பிரிந்தார் ஹேமமாலினி மகள் இஷா தியோல்

1 mins read
5d7a8786-7611-48f6-9b2f-4b8965631cc2
இஷா, பரத் தக்னானி. - படம்: ஊடகம்

பாலிவுட்டின் பிரபல நட்சத்திர தம்பதியர் தர்மேந்திரா - ஹேமமாலினி தம்பதியின் மூத்த மகள் இஷா தியோல் 11 ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து கோரியுள்ளார்.

இஷா, பாலிவுட்டில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் நடித்த ‘ஆய்த எழுத்து’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இவர் பரத் தக்னானி என்பவரை காதலித்து, 2012ல் அவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த பல மாதங்களாகவே கருத்து வேறுபாட்டால் தனித்தனியாக வாழ்ந்து வந்தனர். தற்போது இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், “நாங்கள் பரஸ்பரமாக பிரிய முடிவு செய்துள்ளோம். எங்கள் குழந்தைகளுக்கு என்றும் முக்கியத்துவம் தருவோம்,’’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி