ஷ்ருதியின் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ்

ஷ்ருதியின் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ்

1 mins read
04d40e29-8539-42f3-af73-eec67e5744d9
லோகேஷ் கனகராஜ். - படம்: ஊடகம்

ஷ்ருதிஹாசன் இயக்கத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க உள்ளதாகப் புது தகவல் வெளியாகி இருக்கிறது.

இவர்கள் இருவரும் இருக்கும் ஒரு படம் நேற்று முன்தினம் வெளியானது. அதன்படி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஷ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டது.

ஆனால், லோகேஷ் இயக்கத்தில் ஸ்ருதி நடிக்கவில்லை. ஷ்ருதிஹாசன் இயக்கத்தில்தான் லோகேஷ் நடித்துள்ளாராம்.

ஷ்ருதிஹாசன் இசை மீது ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பல்வேறு சுயாதீன இசை ஆல்பங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வகையில் காதலர் தினத்திற்காக ஷ்ருதி ஓர் இசை ஆல்பம் பாடலைத் தயார் செய்துள்ளாராம். அந்தப் பாடலை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது.

ஷ்ருதி சொன்ன கதையைக் கேட்டதும் லோகேஷுக்குப் பிடித்துப்போக, அவர் உடனடியாக அதில் நடிக்க ஒத்துக்கொண்டாராம். ஷ்ருதி இசையமைத்து, பாடி, இயக்கி உள்ள இந்த ஆல்பத்தில் லோகி நடித்திருக்கிறார்.

காதலர் தின விருந்தாக இந்தப் பாடல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி