‘சந்திரமுகி 2’ படத்தின் தோல்விக்கு பின்னர் நடிகை லட்சுமி மேனன் நாயகியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற ஆரியுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார்.
இயக்குநர் வாசு இயக்கிய ‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் லட்சுமி மேனன். கடந்த ஆண்டு வெளியான இப்படம் படுதோல்வியை சந்தித்தது.
அதனால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் எதுவும் எதிர்பார்த்த அளவு கிடைக்காமல் தவித்து வந்த லட்சுமி மேனன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது பருவத்தில் வெற்றி பெற்ற ஆரி அர்ஜுனனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
பெயரிடப்படாத இப்படம் உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். இப்படத்தை ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்க உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கி உள்ளது. இப்படத்தில் பிளாக் பாண்டி, தன்ராஜ், வையாபுரி, மைம் கோபி, கனிமொழி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.
‘மெட்ராஸ் டெக்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களும் இடம்பெறும் என கூறப்படுகிறது.