குழந்தை பராமரிப்பாளருக்கு லட்சத்தில் சம்பளம் தரும் நடிகர்

குழந்தை பராமரிப்பாளருக்கு லட்சத்தில் சம்பளம் தரும் நடிகர்

2 mins read
9dee23dc-be1c-453b-8682-ede28c9828c7
குழந்தையுடன் ராம் சரண், உபாசனா. - படம்: ஊடகம்

நடிகர் ராம் சரண், உபாசனா ஜோடியின் ஒரே மகளான கிளிங்காராவை பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு வழங்கப்படும் சம்பளம் பற்றி பார்க்கலாம்.

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராம்சரண். இவர் ராஜமவுலி இயக்கத்தில் நடித்த ‘ஆர்.ஆர்.ஆர்’ படம் உலகளவில் பிரம்மாண்ட வெற்றியை ருசித்தது.

அந்தப் படத்திற்குப் பின்னர் பான் இந்தியா நடிகராக உருவெடுத்த ராம்சரண், அடுத்ததாக பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘வாரிசு’ படத் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

அரசியல் கதையம்சம் கொண்ட படமாக ‘கேம் சேஞ்சர்’ உருவாகிறது. இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.

அடுத்ததாக ‘உப்பென்னா’ படத்தை இயக்கிய புச்சி பாபு சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் ராம்சரண். அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படம் தயாராகிறது.

நடிகர் ராம்சரண் கடந்த 2012ஆம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 11 ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்த இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு பெண் குழந்தை பிறந்தது.

இந்தக் குழந்தைக்கு கிளிங்காரா என பெயரிட்டு உள்ளனர். குழந்தை பிறந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை குழந்தையின் முகத்தை வெளியுலகத்துக்கு காட்டாமல் வைத்துள்ளனர்.

தற்போது ராம்சரண் படப்பிடிப்பிலும் உபாசனா தொழிலிலும் மும்முரமாக இருப்பதால் தங்கள் குழந்தையை பராமரித்துக்கொள்ள ஒருவரை நியமித்துள்ளனர்.

சாவித்ரி என்ற அந்த பெண், இதற்கு முன்னர் கரீனா கபூர் உள்ளிட்ட சில சினிமா நட்சத்திரங்களிடம் குழந்தை பராமரிப்பாளராக பணியாற்றியவர்.

குழந்தை பராமரிப்பில் அனுபவமுள்ள சாவித்ரிக்கு தங்கள் குழந்தை கிளிங்காராவை பராமரிக்க மாதத்துக்கு ரூ.5 லட்சம் சம்பளமாக வழங்கி வருகிறார்களாம் ராம்சரண் - உபாசனா ஜோடி. இந்த தகவல் தற்போது வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி