அன்பர் தினத்தில் புதுத் தொழில் தொடங்கும் சினேகா

அன்பர் தினத்தில் புதுத் தொழில் தொடங்கும் சினேகா

1 mins read
5450a928-ee38-4995-b122-b68f78c5c2dd
சினேகா. - படம்: ஊடகம்

தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சினேகா, அன்பர் தினத்தையொட்டி புதுத் தொழில் ஒன்றைத் தொடங்க உள்ளார்.

புன்னகை அரசி என்று அழைக்கப்படும் சினேகா தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார்.

2009ஆம் ஆண்டு வெளிவந்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ திரைப்படம் சினேகாவின் வாழ்க்கையில் மறக்கமுடியாத படமாக அமைந்தது.

ஏனெனில் இப்படத்தில் நடிக்கும்போதுதான் சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதையடுத்து மூன்று ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடி கடந்த 2012ஆம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளது.

குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் தற்போது மீண்டும் வெங்கட் பிரபு இயக்கும் ‘கோட்’ படத்தில் விஜய்யுடன் நடித்து வருகிறார்.

இதுதவிர, ‘ஜீ’ தமிழில் ஒரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருகிறார் சினேகா.

இந்நிலையில், ‘சினேகாலயா சில்க்ஸ்’ என்ற துணிக்கடை ஒன்றை அவர் புதிதாகத் திறக்க உள்ளார்.

இதன் திறப்பு விழா வருகிற பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான அழைப்பிதழை பிரபலங்களுக்கு அனுப்பியுள்ளார் சினேகா. இதைப்பார்த்த ரசிகர்கள் சினேகாவிற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்