சந்தானம் படத்திற்கு கலவையான விமர்சனம்

1 mins read
4cb86899-59fc-404c-876f-7599559652c0
சந்தானம். - படம்: ஊடகம்

சந்தானம் நடித்திருந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படம் கலவையான விமர்சனம் பெற்றதால் படக்குழுவினர் வருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சந்தானம் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர். நகைச்சுவை நடிகராக தனது பயணத்தைத் துவங்கிய சந்தானம், படத்தின் நாயகனாக நடிக்கத் தொடங்கினார்.

இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இப்படத்தை கார்த்திக் யோகி இயக்கியிருந்தார். ‘டிக்கிலோனா’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணைந்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற ‘வடக்குப்பட்டி ராமசாமி’ முதல் மூன்று நாள்களின் முடிவில் ரூ.5.5 கோடி வரை வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், தற்போது 6 நாட்கள் முடிவில் ரூ.6 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது. கிட்டதட்ட கடந்த மூன்று நாட்களில் ரூ.50 லட்சம் மட்டுமே மொத்த வசூலில் அதிகரித்துள்ளது.

இதனால் படம் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டதாகப் பேசப்படுகிறது. சந்தானத்தின் படத்திற்கு இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்
திரைச்செய்தி

தொடர்புடைய செய்திகள்