நகைச்சுவை நடிகராக அதிகம் நடித்திருந்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் அப்புக்குட்டி.
‘அழகர்சாமியின் குதிரை’ படத்தில் கதை நாயகனாக நடித்து, இந்திய தேசிய விருது பெற்றவர் தற்போது ‘வாழ்க விவசாயி’, ‘பிறந்தநாள் வாழ்த்துகள்’ ஆகிய இரு படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
‘வாழ்க விவசாயி’ படத்தில் விவசாயியாக நடித்துள்ள அப்புகுட்டிக்கு ஜோடியாக வசுந்தரா நடித்திருக்கிறார்.
“நான் எப்போதும் கதை நாயகன்தான், கதாநாயகன் அல்ல. எனக்குப் பொருந்தாத வேடங்களாக இருந்தால் மறுத்து விடுகிறேன்.
“நகைச்சுவை வேடங்களிலும் நடிப்பேன்,” என்கிறார் அப்புக்குட்டி.


