சௌந்தர்யாவின் மூன்றாவது படத்தின் நாயகன் லாரன்ஸ்

சௌந்தர்யாவின் மூன்றாவது படத்தின் நாயகன் லாரன்ஸ்

1 mins read
f9552c7f-e0ae-4cf6-af4c-f4d5ae0ae85b
சௌந்தர்யா, லாரன்ஸ். - படங்கள்: ஊடகம்

ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனது மூன்றாவது படத்தை இயக்குவதற்கான பணிகளைத் தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

படத்திற்கு இசையமைக்க ஏ.ஆர். ரகுமான், ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருதரப்புடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இளையர்களைக் கவரும் விதமாக இப்படத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார் சௌந்தர்யா. கதாநாயகி யார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

இப்படத்துக்கான கதையை ஓராண்டுக்கு முன்பே லாரன்சிடம் விவரித்துவிட்டாராம் சௌந்தர்யா. அவர் நடிக்கத் தயாராக இருந்த போதிலும் வேறு சில காரணங்களால் சௌந்தர்யா படப்பிடிப்பை தள்ளி வைத்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்