அனுஷ்காவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அவர் தனது ஐம்பதாவது படத்தில் நடிக்கத் தயாராகி வருவதாக தெலுங்கு ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தெலுங்கு இயக்குநர் கிரிஷ் இப்படத்தை உருவாக்கும் நிலையில், யூ.வி.கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இது நாயகியை முன்னிலைப்படுத்தும் கதையுடன் உருவாகிறதாம்.
அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அன்பர் தினத்தையொட்டி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

