தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்பர் தினத்தன்று மறுவெளியீடு காணும் ‘96’

1 mins read
5372e1d1-3aff-4afe-924c-e959ed0279d0
‘96’ படத்தில் விஜய் சேதுபதி, திரிஷா. - படம்: ஊடகம்

எதிர்வரும் அன்பர் தினத்தையொட்டி தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்தை மறு வெளியீடு செய்ய உள்ளனர். பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் இளையர்களை வெகுவாகக் கவர்ந்தது.

முழுநீள காதல் கதைக்கான பின்னணி இசையும் விஜய் சேதுபதி, திரிஷா உள்ளிட்டோரின் நடிப்பும் அருமையாக இருந்ததாக விமர்சகர்கள் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி அன்பர் தினத்தை முன்னிட்டு ‘96’ படத்தை தமிழகத்தில் உள்ள பல திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய உள்ளதாக விநியோகிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்