ஐந்து கிலோ எடை அதிகரித்த கீர்த்தி; பாராட்டிய தயாரிப்பாளர்

ஐந்து கிலோ எடை அதிகரித்த கீர்த்தி; பாராட்டிய தயாரிப்பாளர்

1 mins read
324422d5-725c-4c07-930f-bac3362f86c5
கீர்த்தி சுரேஷ். - படம்: ஊடகம்

‘சைரன்’ படத்தில் தாம் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்துக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் ஐந்து கிலோ வரை தனது உடல் எடையை அதிகரித்தாராம்.

இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பின்போது இத்தகவலை வெளியிட்ட தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமார், இதுபோன்ற அர்ப்பணிப்பை அனைவரும் பாராட்ட வேண்டும் என்றார்.

“கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் இது முக்கியமான படமாக அமையும். ஜெயம் ரவியும் அருமையாக நடித்துள்ளார் என்பது படம் பார்க்கும்போது தெரியவரும்.

“சைரன் பொருத்தப்பட்டுள்ள அவசர மருத்துவ வாகனத்துக்கும் காவல்துறை வாகனத்துக்கும் இடையேயான போராட்டம்தான் இப்படத்தின் கதைக்கரு.

“சமுத்திரக்கனி எல்லா மொழிகளிலும் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து அசத்துகிறார். இந்தப் படத்திலும் நன்றாக நடித்துள்ளார். யோகி பாபு படம் முழுக்க வருகிறார். அவர் நடிப்பைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தேன்,” என்றார் சுஜாதா விஜயகுமார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்