பல கோடி ரூபாய் கொடுத்தாலும் தம்மால் விளம்பரப் படங்களில் நடிக்க இயலாது என்று திட்டவட்டமாக மறுக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.
குறிப்பாக சூதாட்டம், குளிர்பானங்களுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் தம்மால் பங்கேற்க இயலாது என அண்மையில் அவர் கூறியுள்ளார்.
தற்போது, ‘தங்கலான்’, ‘எமர்ஜென்சி’, ‘சூரரைப் போற்று’ இந்தி மறுபதிப்பு, ‘சிவகார்த்திகேயன் 21’, ‘சூர்யா-43’ உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் ஜி.வி.பிரகாஷ், ‘கள்வன்’, ‘ரெபெல்’, ‘டியர்’ போன்ற படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
“சில விளம்பரப் படங்களில் நடிக்க எனக்கு கோடிக்கணக்கில் ஊதியம் பேசப்பட்டது. ஆனால் அந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டேன். அதே சமயம் விளையாட்டுத் தூதராகச் செயல்படுவதில் ஆர்வமாக உள்ளேன்,” என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

