விக்ரமுடன் திரையில் மோதும் எஸ்.ஜே.சூர்யா

விக்ரமுடன் திரையில் மோதும் எஸ்.ஜே.சூர்யா

1 mins read
2726666d-2467-4ddd-b2c5-85f98e8c4f8d
எஸ்.ஜே.சூர்யா. - படம்: ஊடகம்

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வரிசையாக பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா.

தற்போது அவர் ‘இந்தியன் 2’, ‘கேம் சேஞ்சர்’, ‘தனுஷ் 50’ என தமிழ்த் திரையுலகின் முக்கியமான படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், விக்ரம் நடிக்கும் 62து படத்திலும் அவர் இணைந்துள்ளார்.்

‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார் இயக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

அடிதடிக் காட்சிகள் நிறைந்த கதையுடன் உருவாகும் இதில் வில்லன் கதாபாத்திரத்தை ஏற்றுள்ளாராம் எஸ்.ஜே.சூர்யா.

ஏற்கெனவே ‘மெர்சல்’, ‘மாநாடு’ போன்ற படங்களில் இவர் வில்லனாக நடித்து அசத்தி உள்ளார். இந்நிலையில், முதன்முறையாக விக்ரம் உடன் இணைந்து நடிப்பபதுடன், கொடூர வில்லனாக அவருடன் திரையில் மோத உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்