‘கோலிவுட் வில்லன் ஆனந்த்ராஜுக்கு வேறு ஒரு முகம் உள்ளது’

ஒரு நல்ல நடிகன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடிப்பதற்கு அவர் 100 படங்களில் நடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே ஒரு படத்தில் நடித்திருந்தாலும் போதும்.

அதில் தான் ஏற்று நடித்த பாத்திரத்தை மிகச் சிறப்பாகச் செய்து அதன் மூலம் படம் பார்ப்பவர்களின் மனதில் “யாருய்யா இது? இப்படி மிரட்டி இருக்கிறாரே?” என்று உணர வைத்த நடிகர்களுள் ஒருவராக ஆனந்த்ராஜைக் குறிப்பிடலாம் என்கிறார் நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன்.

தமிழ், தெலுங்கு என இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் வில்லனாக நடித்தவர் நடிகர் ஆனந்த்ராஜ்.

தனது இரண்டாம் கட்ட திரைப் பயணத்தை நகைச்சுவை நடிகராகத் தொடர்ந்து வரும் ஆனந்த்ராஜுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

இந்நிலையில், அவரது வில்லத்தனமான நடிப்புக்கும் உண்மை முகத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நடிகர் பயில்வான் ரங்கநாதன் பகிர்ந்துள்ளார்.

“ஆனந்த்ராஜ் சினிமாவில் மிகக் கொடூரமான வில்லனாகத் தோன்றினாலும் தனது 35 ஆண்டுகால பயணத்தில் அவரைப் பற்றி எந்த கிசுகிசுவும் வந்ததில்லை. காரணம் அவர் எப்போதுமே தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பவர்.

“அரசியலிலும் அவ்வப்போது ஈடுபட்டு வந்தவர் அவர். தனக்கு கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கும் அவருடைய குணத்திற்கும் சம்பந்தமே இருக்காது.

“திரையுலகில் அறிமுகமானபோதே ‘விக்’ வைத்துதான் நடிக்கத் துவங்கினார்,” எனக் கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

வில்லனாக பார்ப்பதில் மனைவிக்கும் மகிழ்ச்சி

“முன்னதாக வில்லன்கள் முக்கியமல்ல என்ற கருத்து நிலவியது. ஆனால் இப்போது, ​​மக்கள் சக்தி வாய்ந்த எதிர்மறை கதாபாத்திரம் கொண்ட படத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள்.

“இதில் என்ன ஆச்சர்யம் என்றால், எனது குடும்பத்தினரும் எனது எதிர்மறையான வேடங்களைக் கண்டு ரசிக்கின்றனர். சொல்லப்போனால், நான் வில்லன் ஆனதில் என் மனைவிக்கு மகிழ்ச்சி.

“நானும், தனிப்பட்ட முறையில் எனது எதிர்மறை கதாபாத்திரங்களை ரசித்துள்ளேன். நான் ஒரே மாதிரியாக இல்லாமல் வித்தியாசமான பாத்திரங்களில் நடித்தது தான் எனது பயணத்தை உற்சாகமாக வைத்துள்ளது,” என்று அவர் கூறினார்.

நடிகர் ஆனந்த் ராஜிற்கு மனைவியும் ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!