மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்

1 mins read
acc22746-89b9-43f0-9346-438291d59635
படம்: - ஊடகம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் தலைப்பு மற்றும் டீசர் காணொளி வரும் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது. அதை அறிவிக்கும் விதமாக படக்குழு ஒரு சிறிய காணொளியை வெளியிட்டு அசத்தியுள்ளது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் , சோனி பிக்சர்ஸுடன் இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

தற்போது வெளியிடப்பட்ட காணொளியில் சிவகார்த்திகேயன் உடற்பயிற்சி மேற்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அதில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியை மேற்கொள்ளும் காட்சிகளும் உள்ளன.

காணொளியைப் பார்த்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் தங்களது மகிழ்ச்சியைப் பதிவிட்டு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்