குறைந்த செலவில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு நுழைவுச்சீட்டு விலையைக் குறைக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 80 - 100 ரூபாய் எனவும், பெரும் பொருட் செலவில் உருவாகும் படங்களுக்கு 120 - 150 ரூபாய் எனவும் கட்டணத்தை மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சென்னை, மதுரையில் ரூ.100 மட்டுமே வசூலிக்க வேண்டும் . திருச்சி, கோவை, சேலம் தவிர்த்த மற்ற நகரங்களில் அதிகபட்சம் ரூ.80 கட்டணம் நிர்ணயிக்கலாம். வரும் 23ஆம் தேதி முதல் வெளியாகும் படங்களுக்கு நுழைவுச்சீட்டு விலையை குறைவாக நிர்ணயிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறைந்த செலவில் தயாரிக்கப்படும் படங்களை திரையரங்கிற்கு வந்து மக்கள் பார்ப்பதை இலகுவாக்கும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

