தென் இந்திய நடிகர்களில் மிக முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார் ஃபஹத் பாசில்.
தற்போது அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. மலையாளத்தில் வெளியாக உள்ள இந்தப் படத்துக்கு ‘கராத்தே சந்திரன்’ என பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் ஃபாசில் நடிப்பில் அடுத்ததாக ‘ஆவேஷம்’ மலையாளப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதையடுத்து அவர், ரஜினிகாந்துடன் இணைந்து ‘வேட்டையன்’ படத்தில் நடித்து வருகிறார்.
வடிவேலுவுடன் இணைந்து ‘மாரீசன்’ படத்தில் நடிக்கிறார். தெலுங்கில், அல்லு அர்ஜூனுடன் இணைந்து ‘புஷ்பா 2’ படத்தில் நடிப்பது என ஃபாசில் அசத்தி வருகிறார்.
அறிமுக இயக்குநர் ராய் இயக்கத்தில் ‘கராத்தே சந்திரன்’ உருவாகிறது. இதில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் குறித்த அறிவிப்பு எதையும் படக்குழு வெளியிடவில்லை. மேலும் இது தொடர்பான அறிவிப்புப் பதிவில், ஃபஹத் பாசில் கராத்தே உடை அணிந்து நிற்கும் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.