தனுஷுடன் இணையும் இயக்குநர் வினோத்

1 mins read
8519c615-bce6-461f-8726-a9bbab4480f5
தற்போது தனு‌ஷ், சேகர் கமுலா இயக்கும் ‘D51’ படத்தில் நடித்து வருகிறார். - படம்: சமூக ஊடகம்

ஹெச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாகவும், படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘துணிவு’ படங்களின் இயக்குநர் ஹெச்.வினோத். அவர் அடுத்ததாக கமல்ஹாசனை இயக்க உள்ளதாகத் தகவல் வெளியானது.

‘KH233’ என அழைக்கப்பட்ட அந்தப் படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. மேலும், அந்தப் படம் கைவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் இரண்டாம் பாகத்தில் வினோத் கவனம் செலுத்தி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், தனுஷை வைத்து ஹெச்.வினோத் படம் ஒன்றை இயக்க இருப்பதாகத்கவல் வெளியாகியுள்ளது.

தனுஷை பொறுத்தவரை அவர் ‘D50’ படத்தை இயக்கி முடித்துவிட்டார். தற்போது சேகர் கமுலா இயக்கும் ‘D51’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படப்பிடிப்புகளை முடித்துவிட்டு ஹெச்.வினோத்துடன் இணைவார் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்