தாம் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக கவர்ச்சியின் எந்த எல்லைக்கும் செல்ல தயார் என்கிறார் நடிகை ஸ்வேதா மேனன்.
‘சினேகிதியே’, ‘நான் அவன் இல்லை -2’, ‘சாது மிரண்டால்’ உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், தம்மைக் கவர்ச்சி நடிகை என்று பொதுப்படையாகக் குறிப்பிடு வதை ஏற்க இயலாது என்கிறார்.
“ஒவ்வொரு படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரங்கள் அமைகின்றன. நீச்சல் உடை அணிந்து வசனம் பேசி நடிக்கச் சொன்னாலும் தயங்கமாட்டேன். கவர்ச்சியின் எந்த எல்லைக்கும் செல்ல நான் தயார்.
“ஏனெனில், நாம் எப்படி நடிக்கவேண்டும் என்பதை கதாபாத்திரங்கள்தான் முடிவு செய்கின்றன,” என்கிறார் ஸ்வேதா.

