‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம்: மேலும் முப்பது நாள்களுக்குப் படப்பிடிப்பு

‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம்: மேலும் முப்பது நாள்களுக்குப் படப்பிடிப்பு

1 mins read
561ef2ca-2d7c-466d-a594-087e44aab678
‘விடுதலை’ படத்தின் சுவரொட்டி. - படம்: ஊடகம்

‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் வெளியீடு காணும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் முழுமை அடையவில்லை எனத் தெரியவந்துள்ளது.

மேலும் முப்பது நாள்களுக்குப் படப்பிடிப்பு நடத்த இயக்குநர் வெற்றி மாறன் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி, சூரி ஆகியோருடன் மஞ்சு வாரியர், ‘அட்டகத்தி’ தினேஷ் இருவரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதற்கிடையே, விஜய் சேதுபதியை இளையராகத் திரையில் கொண்டு வர சில தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உள்ளனராம். இதற்காக வெற்றி மாறன் அமெரிக்கா செல்ல உள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்