தற்போது தமிழ் மட்டு மல்லாமல், தெலுங்குப் படங்களிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் நடிகை திரிஷா.
சிரஞ்சீவியுடன் இவர் இணைந்து நடிக்கும் படத்திற்காக குதிரையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளாராம். சிரஞ்சீவியுடன் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கிறார் திரிஷா.
தற்போது ‘விஸ்வாம்பரா’ என்ற தெலுங்குப் படத்தில் சிரஞ்சீவியும் திரிஷாவும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
சரித்திர கதையுடன் உருவாகும் இப்படத்தில், வீரப்பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் திரிஷா. இதற்காக களரி சண்டைப் பயிற்சியிலும் ஈடுபட்டுள்ளாராம்.
தமிழில் ‘விடாமுயற்சி’, ‘ராம்’, ‘தக் லைஃப்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் திரிஷா.