நடிகை பிரியங்கா அருள் மோகனுக்கு தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் அமைந்து வருகின்றன.
இந்நிலையில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனக்கு அமைந்த பாத்திரம் மிகுந்த மனநிறைவை அளித்துள்ளதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
“அந்தப் படத்தில் வேல்மதி என்ற பாத்திரத்தில் நடித்துள்ளேன் என்பது அனைவருக்கும் தெரியும். ஒருசில படங்களும் கதாபாத்திரங்களும்தான் இதுபோன்ற மனநிறைவைத் தரும்.
“தமிழில் தற்போது ராஜேஷ் இயக்கும் ‘பிரதர்’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தெலுங்கில் நானி, பவன் கல்யாண் ஆகியோருடன் நடித்து வருகிறேன்,” என்கிறார் பிரியங்கா.

