கேரளாவில் முதல் ஆளாக புதுக் காரை வாங்கிய ஐஸ்வர்யா லட்சுமி

1 mins read
d80aaeb6-da70-4754-87b9-41459d0484ed
புதுக்காருடன் ஐஸ்வர்யா லட்சுமி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் பூங்குழலியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் இப்போது புதுக் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

கையில் பல படங்களுடன் பரபரப்பான நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா லட்சுமி தற்போது ‘ரேஞ்ச் ரோவர் இவோக் 2024’ என்ற சொகுசுக் காரை வாங்கி இருக்கிறார்.

கேரளாவில் இந்த மாடல் காரை வாங்கும் முதல் நபர் ஐஸ்வர்யா லட்சுமி தானாம்.

மலையாள நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி, தமிழில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘ஆக்‌ஷன்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். அப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா, அடுத்ததாக தனுஷுடன் ‘ஜெகமே தந்திரம்’ படத்தில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் சமுத்திரக்குமாரி பூங்குழலி வேடத்தில் நடித்து அசத்தினார்.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஐஸ்வர்யா லட்சுமிக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி விஷ்ணு விஷால் ஜோடியாக அவர் நடித்த ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தது.

அடுத்து, தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமான ‘தக்லைஃப்’ படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார் ஐஸ்வர்யா.

இப்படத்தில் ஜெயம் ரவி, கமல்ஹாசன், திரிஷா, துல்கர் சல்மான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்