35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படத்தில் குஷ்பு

35 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திப் படத்தில் குஷ்பு

1 mins read
64875a87-1687-4d06-a811-3a41336e0c63
குஷ்பு. - படம்: ஊடகம்

ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியில் நடிக்க உள்ளார் குஷ்பு.

எட்டு வயதில் ‘தி பர்னிங் டிரெயின்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் குஷ்பு.

அதன் பின்னர் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ரசிகர்கள் கோவில் கட்டும் அளவுக்கு பிரபலமானார். தமிழில் கனவுக்கன்னியாக வலம் வந்த இவருக்கு மீண்டும் இந்தியில் நடிக்க வாய்ப்பும் நேரமும் அமையவில்லை.

இந்நிலையில் இந்தி நடிகர் நானா படேகர் நாயகனாக நடிக்கும் படத்தில் குஷ்புவும் நடிக்க உள்ளார்.

“இந்தியில் மீண்டும் எனது பயணத்தை தொடங்குகிறேன். இந்த அற்புதமான படத்தில் ஒரு பகுதியாக நானும் இடம் பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது,” என தமது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் குஷ்பு.

குறிப்புச் சொற்கள்