உரிய ஊதியம் வழங்கப்படவில்லை: மனிஷா

உரிய ஊதியம் வழங்கப்படவில்லை: மனிஷா

1 mins read
bf14786d-0ce5-4df8-963f-1ab83ddbb3e3
மனிஷா யாதவ். - படம்: ஊடகம்

’நினைவெல்லாம் நீயடா’ என்ற புதிய படத்தில் நடித்துள்ள தமக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என நடிகை மனிஷா யாதவ் புகார் எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் சங்கத்தில் அவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

தனக்கு பேசப்பட்ட ஊதியத்தில் இன்னும் 3 லட்சம் ரூபாய் தராமல் பாக்கி வைத்துள்ளனர் என்றும் படம் வெளியீடு காண்பதற்குள் அதை பெற்றுத் தர வேண்டும் என்றும் மனிஷா யாதவ் கேட்டுக் கொண்டுள்ளார்.

இளையராஜா இசையமைத்துள்ள ‘நினைவெல்லாம் நீயடா’ படம் வரும் 23ஆம் தேதி வெளியீடு காண உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரஜன்த், சினாமிகா, மதுமிதா, ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் ஆதிராஜன் ஏற்கனவே ‘சிலந்தி’, ‘அருவா சண்ட’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.

குறிப்புச் சொற்கள்