’ராமாயண்’ என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடிகை ரகுல் பிரித்சிங் சூர்ப்பனகை கதாபாத்திரத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
பல்வேறு மொழிகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
கதாநாயகனாக இந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடிக்க, சீதை கதாபாத்திரத்தில் சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் நடிகர் யஷ், ராவணன் கதாபாத்திரத்திலும் சன்னி தியோல் அனுமன் வேடத்திலும் நடிக்க உள்ளனர்.
மிக முக்கியமாக, தசரத சக்கரவர்த்தி கதாபாத்திரத்தை அமிதாப்பச்சன் ஏற்றுள்ளாராம். சூர்ப்பனகை கதாபாத்திரத்திற்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும் என இயக்குநர் தரப்பில் உறுதி மொழி வழங்கப்பட்டதால் தாம் அதை ஏற்றதாகச் சொல்கிறார் ரகுல் பிரித்சிங்.
இப்படம் குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளன.

