நீச்சல் உடையில் கௌரி: ரசிகர்கள் அறிவுரை

நீச்சல் உடையில் கௌரி: ரசிகர்கள் அறிவுரை

1 mins read
e529ac08-3bca-48f6-a602-20088dfae6d5
கௌரி கிஷன். - படம்: ஊடகம்

நடிகை கௌரி கிஷன் அண்மையில் வெளியிட்ட இன்ஸ்டகிராம் பதிவை லட்சக்கணக்காணோர் கண்டு ரசித்துள்ளனர்.

முதல்முறையாக அவர் நீச்சல் உடையில் இருக்கும் படங்களை வெளியிட்டு இருப்பது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

‘கர்ணன்’, ’96’ உள்ளிட்ட படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் நடித்தவர் கௌரி. இந்நிலையில் அன்பர் தினத்தையொட்டி நீச்சல் உடையில், மழையில் நனைந்தபடி ஆட்டம் போடும் காணொளியை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தக் காணொளியை இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

அதே சமயம் குடும்பப் பாங்காக நடித்த நீங்கள் திடீர் என கவர்ச்சிக் காட்டுவதை ரசிக்க முடியவில்லை என்றும் பலர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்