‘அமரன்’: மேஜர் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன்

‘அமரன்’: மேஜர் பாத்திரத்தில் சிவகார்த்திகேயன்

1 mins read
805b0f39-aec2-40e1-a7e2-63173c381d80
‘அமரன்’ படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டி. - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அமரன்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க, சாய் பல்லவி நாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 21வது படமாக இது உருவாகிறது.

இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டியின் குறுமுன்னோட்டக் காட்சித் தொகுப்பு கடந்த 16ஆம் தேதி மாலை வெளி யிடப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகிறது என்றும் முகுந்த் வரதராஜனாக சிவா நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

முழுப்படமும் கிட்டத்தட்ட காஷ்மீர் பிண்ணனியில் படமாக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பயங்கரவாதத் தாக்குதல், அதை இந்திய ராணுவம் எதிர் கொள்ளும் விதம் உள்ளிட்ட அம்சங்கள் விரிவாக இடம் பெற்றிருக்குமாம்.

“ஒரு ராணுவ அதிகாரிக்கு உரிய கம்பீரத்தை சிவகார்த்தி கேயன் தனது நடிப்பில் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். அதனால் குறுமுன்னோட்டக்காட்சித் தொகுப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது,” எனப் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

முன்னோட்டக் காட்சித் தொகுப்பை நடிகர் கமல் ஹாசன் வெளியிட்டார்.

“சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி ‘அமரன்’ படத்தின் முன்னோட்டக் காட்சித் தொகுப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். தம்பி சிவகார்த்திகேயன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்,” என கமல் தெரிவித்துள்ளார்.

கடந்த 1992ஆம் ஆண்டு ராஜேஷ்வர் இயக்கத்தில் கார்த்திக், பானுப்பிரியா நடிப்பில், இதே தலைப்பில் ஒரு படம் வெளியாகி உள்ளது.

குறிப்புச் சொற்கள்