‘காத்திருப்பு வீண்போகவில்லை’

‘காத்திருப்பு வீண்போகவில்லை’

1 mins read
0c9b1eff-15d9-4069-9e16-01ef367b528d
‘லவ்வர்’ படத்தில் ஒரு காட்சி. - படம்: ஊடகம்
Google News Preferred Icon

‘லவ்வர்’ படத்தின் வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளித்திருப்பதாகக் கூறியுள்ளார் நடிகர் மணிகண்டன்.

கடந்த 9ஆம் தேதி இந்தப் படம் வெளியீடு கண்டது. வேறு படங்கள் வெளியீடு கண்ட போதிலும் ‘லவ்வர்’ படம் விமர்சன, வசூல் ரீதியில் மற்ற படங்களை விஞ்சி முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இதை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.

“இதுபோன்ற சில வெற்றிகளுக்காகத்தான் இத்தனை ஆண்டுகளாகக் காத்திருந்தேன். என் காத்திருப்பு வீண் போகவில்லை,” என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி நெகிழ்கிறாராம் மணிகண்டன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்