திருநங்கை கதாபாத்திரத்தில் சிம்பு

திருநங்கை கதாபாத்திரத்தில் சிம்பு

1 mins read
afb06030-069e-4a09-9cac-e0c9b95c06c9
சிம்பு. - படம்: ஊடகம்

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதும், இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரிப்பதும் தெரிந்த சங்கதிகள்தான்.

இப்படத்தை நூறு கோடி ரூபாய் செலவில் உருவாக்க உள்ளனர். வரலாற்றுப் பின்னணியுடன் கூடிய கதை என்பதால் அதிகம் செலவாகும் எனக் கணக்கிட்டுள்ளனர்.

படத்தில் சிம்பு இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் அதில் திருநங்கை பாத்திரமும் ஒன்று என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சிம்பு திருநங்கையாக நடிக்கவில்லை என்றும், ‘வரலாறு’ படத்தில் அஜித் நடித்தது போன்று பெண் நளினத்தன்மை கொண்டவராக நடிக்கிறார் என்றும் சமூக ஊடகங்களில் மேலும் ஒரு தகவல் உலா வருகிறது.

குறிப்புச் சொற்கள்