‘மீண்டும் வந்து விட்டேன்’: அறிவித்த சண்முக பாண்டியன்

‘மீண்டும் வந்து விட்டேன்’: அறிவித்த சண்முக பாண்டியன்

1 mins read
c4f86c58-7b6d-4390-8110-7950d9974355
சண்முக பாண்டியன். - படம்: ஊடகம்

விஜயகாந்த் காலமான சோகத்தில் இருந்து அவரது குடும்பத்தார் மெல்ல மீண்டு வருகின்றனர்.

அவரது இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் ‘படைத்தலைவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இளையராஜா இசையமைக்கும் இந்தப் படத்தை அன்பு இயக்குகிறார்.

விஜய்காந்த் உடல்நிலை மோசமானதை அடுத்து இந்தப் படவேலைகளில் சண்முக பாண்டியனால் ஈடுபட முடியவில்லை. இந்நிலையில் ‘மீண்டும் வந்து விட்டேன்’ என்று சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார் சண்முக பாண்டியன்.

இதன் மூலம் தாம் மீண்டும் திரையுலகப் பணிகளில் ஈடுபடுவதை ரசிகர்களுக்கு அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ‘குற்றப் பரம்பரை’ இணையத்தொடரிலும் இவர் நடித்துள்ளதாக தகவல்.

குறிப்புச் சொற்கள்