விக்ரமுடன் மோதும் மூன்று வில்லன்கள்

விக்ரமுடன் மோதும் மூன்று வில்லன்கள்

1 mins read
5c46cc63-d5d0-4bca-87fe-1ec097000b14
விக்ரம். - படம்: ஊடகம்

விக்ரம் நடிக்கும் 62வது படத்தில் அவருடன் மூன்று வில்லன்கள் மோத உள்ளனர். இதனால் படத்தில் விறுவிறுப்பும் அடிதடிக் காட்சிகளும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தங்கலான்’ படத்தை முடித்த கையோடு, ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்து வருகிறார் என்றும், இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், எஸ்.ஜே.சூர்யா அல்லாமல், இந்தப் படத்தில் மேலும் இரு வில்லன் கதாபாத்திரங்கள் உள்ளனவாம்.

இது தொடர்பாக நடிகர் ஃபகத் பாஸிலுடனும் தெலுங்கு மூத்த நடிகர் ஒருவருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்