இணையத் தொடர்களில் அதிக சம்பளம் வாங்கும் முதல் ஐந்து நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் சமந்தா.
ஓடிடியில் எந்த ஒரு நிபந்தனையும் இல்லாததால் பலரும் இதில் படங்களை வெளியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். பாலிவுட் முதல் டோலிவுட் நடிகைகள் வரை சினிமா படங்களைத் தாண்டி ஓடிடியில் வெளியாகும் இணையத்தொடர்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதில் அதிக சம்பளம் பெரும் முதல் ஐந்து நடிகைகளில் ஐந்தாவது இடத்தில் பிரியாமணி, நான்காவது இடத்தில் ராஷிகண்ணா, மூன்றாவது இடத்தில் சுஷ்மிதா சென், இரண்டாவது இடத்தில் ராதிகா ஆப்தே இருக்கின்றனர்.
இந்த வரிசையில் முதலிடத்தில் இருப்பது ரசிகர்களின் விருப்ப நாயகியான சமந்தாதான்.
ராஜ், டிகே இயக்கத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன்’ இணையத்தொடரின் இரண்டாவது பாகத்தில் தைரியமான பெண்ணாக சமந்தா நடித்த நிலையில், அவருக்கு 4 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
அடுத்ததாக மீண்டும் ராஜ், டிகே இயக்கத்தில் உருவாகி வரும் ‘சிட்டாடல்’ இணையத்தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.10 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

