மம்மூட்டியின் சிறந்த ஐந்து படங்கள்

மம்மூட்டியின் சிறந்த ஐந்து படங்கள்

2 mins read
ed86a602-614b-4dd7-9b10-fc1eb7f60ea8
மம்மூட்டி. - படம்: ஊடகம்

மலையாள நடிகர் மம்மூட்டி தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. அவற்றில் மக்களால் பாராட்டப்பட்ட முதல் ஐந்து படங்கள்:

மம்முட்டி தனது 70 வயதிலும் புதுப் புது கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகின்றார். அந்த வகையில் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருப்பார் ரம்யா பாண்டியன். தெரியாத ஒருவருடைய வீட்டுக்குள் நுழைந்து அங்கு இருப்பவர்களோடு சகஜமாக பழகும் ஒரு நாயகனின் வினோதமான கதைக்களம் கொண்ட படம்.

காவல்துறை அதிகாரியாக பல திரைப்படங்களில் மம்மூட்டி நடித்திருந்தாலும் ‘கண்ணூர் ஸ்குவாட்’ என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அடுத்ததாக, இதுவரை எந்த முன்னணி நாயகனும் ஏற்று நடிக்காத ஒரு கதாபாத்திரத்தை மிக துணிச்சலாக ஏற்று நடித்த திரைப்படம் ‘காதல் தி கோர்’. உண்மையில் இந்தத் திரைப்படத்தில் அவர் ஏற்று நடித்த அந்த கதாபாத்திரம் பலருக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளது.

அவர் நடிப்பில் வெளியான மற்றொரு திரைப்படம் ‘புழு’. மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மிக எளிமையான கதைக்களம் என்றாலும் மம்மூட்டியை எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து படத்தை வெற்றி பெறச் செய்தார் பிரபல இயக்குனர் ரத்தீனா.

இறுதியாக இவர் நடித்திருந்த ‘பேரன்பு’ படமும் பலராலும் பார்த்து ரசிக்கப்பட்டது. உண்மையில் பல நடிகர்கள் நடிக்க முன்வராத ஒரு கதாபாத்திரம் என்றாலும் அதில் மிக நேர்த்தியாக நடித்து இருந்தார் மம்மூட்டி என்று பாராட்டுகிறது கோலிவுட்.

குறிப்புச் சொற்கள்