இணையத்தில் ‘சபாநாயகன்’

இணையத்தில் ‘சபாநாயகன்’

1 mins read
7f412434-45be-4255-a5cb-62686747bcb7
சபாநாயகன். - படம்: ஊடகம்

அசோக் செல்வன் நடித்திருந்த ‘சபாநாயகன்’ படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.

அசோக் செல்வன், மேகா ஆகாஷ், கார்த்திகா முரளிதரன் மற்றும் சாந்தினி சௌத்ரி ஆகியோர் நடிப்பில், இயக்குநர் சிஎஸ் கார்த்திகேயன் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘சபா நாயகன்’.

காதலுடன் நகைச்சுவைக் கலந்த படமாக உருவான இப்படம் கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.

உலக நாயகன் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சிஎஸ் கார்த்திகேயன் இப்படத்தை இயக்கி இருந்தார்.

இந்நிலையில், ‘சபாநாயகன்’ படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்