வெள்ளிக்கிழமை ஓடிடியில் 23 படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் மீண்டும் வசூல் வேட்டைக்குத் தயாராகி உள்ளது ‘கேரளா ஸ்டோரி’.
முன்பெல்லாம் திரையரங்குகளுக்குச் சென்று படங்கள் பார்ப்பதே அரிதாக இருந்த நிலையில் இப்போது டிஜிட்டல் உலகில் கைத்தொலைபேசியிலேயே பல படங்களைப் பார்க்க முடிகிறது. அதுவும் இப்போது ஓடிடியின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வாரமும் போட்டி போட்டுக் கொண்டு படங்கள் வெளியாகின்றன.
அந்த வகையில் தமிழில் அசோக் செல்வனின் ‘சபாநாயகன்’ படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் ஜித்தன் ரமேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ரூட் நம்பர் 17’ படம் அமேசான் பிரைமில் வெளியானது.
மேலும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான ‘மிஷன் சாப்ட்வேர் ஒன்’ படம், மலையாளத்தில் ஜெயராம் நடிப்பில் உருவான ‘ஆபிரகாம் ஒஸ்லர்’ படம் அமேசான் பிரைமிலும் வெளியாகி உள்ளன.
மேலும் கடந்த ஆண்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்ற ‘கேரளா ஸ்டோரி’ படம் ‘ஜீ5’ ஓடிடி தளத்திலும் தமிழில் ‘வேற மாறி லவ் ஸ்டோரி’ என்ற இணையத்தொடர் ஆஹா ஓடிடி தளத்திலும் வெளியாகி உள்ளன.
பாலிவுட்டில் ‘ரைசிங்கனி vs ரைசிங்கனி’ என்ற படம் சோனிலைவ் ஓடிடி தளத்திலும் அமேசான் பிரைமில் ‘லவ் ஸ்டோரியன்’, ‘ஆர்யா சீசன் 3’ ஆகியவை வெளியாகி உள்ளன.