இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் ‘வணங்கான்’ படத்தில் அருண் விஜய், ‘பிதாமகன்’ படத்தில் விக்ரம் காட்சியளித்ததுபோன்ற தோற்றத்தில் இருக்கும் படம் வெளியாகி உள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகத் துவங்கிய திரைப்படம்தான் ‘வணங்கான்’. சில ஆண்டுகளுக்கு முன்பே சூர்யாவை வைத்து இந்தப் படத்தின் பணிகள் துவங்கிய நிலையில், ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் சூர்யா இந்தத் திரைப்படத்தில் இருந்து விலகினார்.
இதனையடுத்து இந்தத் திரைப்படத்தில் கதையின் நாயகனாக அருண் விஜய் களமிறங்கி நடிக்க துவங்கினார். பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இந்தத் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில், முற்றிலும் மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிகர் அருண் விஜய் இந்தத் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.
இந்தத் திரைப்படத்தில் முதல் முறையாக பிரபல இயக்குநர் மிஷ்கின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது இந்தத் திரைப்படத்தின் விளம்பரப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நிச்சயம் இது அருண் விஜய்யின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

