பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் ‘கர்ணா’ படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக ஜான்வி கபூர்தான் நடிக்க இருக்கிறார் அவரின் தந்தை போனி கபூர் அறிவித்து இருக்கிறார்.
பிரபல நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படமாக மாறி இருக்கிறது சிறுத்தை சிவாவின் ‘கங்குவா’ திரைப்படம்.
மிக நேர்த்தியாக இந்த திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கான தனது பணிகளை நடிகர் சூர்யா ஏற்கெனவே முடித்து தற்போது தனது அடுத்த படத்திற்கான பணிகளை கவனித்து வருகின்றார்.
அண்மையில் நடிகர் அமீர்கானின் மகள் திருமணத்தில் பங்கேற்க மும்பை சென்றிருந்தார். அங்கு அமிதாபச்சன் மற்றும் அக்ஷய்குமார் ஆகியோருடன் இணைந்து ஒரு விளம்பரப் படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் பாலிவுட் உலகில் பிரபல இயக்குநரான ராகேஷ் இயக்கவிருக்கும் ‘கர்ணா’ என்ற இதிகாச திரைப்படத்தில் கர்ணனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூர்யா.
பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கெனவே துவங்கி விட்டதாகவும் விரைவில் அப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில், அவருடைய தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் ‘கர்ணா’ திரைப்படத்தில் தனது மகள் ஜான்வி கபூர், சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதை உறுதி செய்திருக்கிறார்.