தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சமூகப் பிரச்சினைகளை அலசும் ‘போர்’ திரைப்படம்

1 mins read
cb616e97-4ca0-4b27-8c5a-fa4e58654e87
சஞ்சனா. - படம்: ஊடகம்

‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படம் பார்த்தவர்களுக்கு சஞ்சனா நடராஜன் குறித்து தெரிந்திருக்கும்.

இப்போது அவர், தாம் நடித்துள்ள ‘போர்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்.

“இந்தப் புதுப் படத்தில் ‘ரிஷிகா’ என்ற மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன். இந்தக் கதாபாத்திரம் எனது நிஜ வாழ்க்கையையும் இயல்பையும் ஒத்திருக்கிறது,” என்கிறார் சஞ்சனா.

நண்பர்கள் குழுவைச் சுற்றிச் சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை விவரிக்குமாம்.

மேலும், அரசியல் சார்ந்த சில சர்ச்சைகள், சில சமூகப் பிரச்சினைகள் குறித்தும் திரைக்கதை அலசுகிறது.

“இதில் எனது கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதை உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி உள்ளது. மிக யதார்த்தமான படைப்பு,” என்கிறார் சஞ்சனா நடராஜன்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்