தனுஷ் நடிப்பில் உருவாகும் ஐம்பதாவது படத்தின் தலைப்பு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ராயன்’ என்ற தலைப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ள நிலையில், இப்படத்தின் மொத்தப் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகத் தெரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கதைக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொண்டு நடிக்கும் தனுஷ், இந்தப் புதிய படத்துக்காக மொட்டை போட்டு நடித்துள்ளார்.
‘கேப்டன் மில்லர்’ படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்த நிலையில், ஐம்பதாவது படத்தை தாமே இயக்குகிறார் தனுஷ்.
இப்படத்தின் முதல்தோற்றச் சுவரொட்டியைப் பார்க்கும்போது அடிதடி காட்சிகள் நிறைந்த கதையாக இருக்கும் என எண்ணத் தோன்றுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இப்படத்தின் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது.