இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவர் தேர்தலில் சபேசன் வெற்றி
இசைக் கலைஞர்கள் சங்கத் தலைவராக சபேசன் தேர்வு பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தினா தோல்வி கண்டார்.
சென்னையில் தேர்தல் அதிகாரி பாலசுப்ரமணியன் முன்னிலையில் நடந்த இத்தேர்தலில் சபேசன் 318 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தினாவுக்கு 248 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.
ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்த தினா மூன்றாவது முறையாகவும் போட்டியிட்டார். இவர் மீது முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று தினாவுக்கு மூத்த இசையமைப்பாளர் இளையராஜா நேரடியாக அறிவுறுத்தினார். எனினும், அதை மீறி களமிறங்கிய அவர் தோல்வி அடைந்துள்ளார்.

