விஜய் படத்தில் ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள்

விஜய் படத்தில் ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள்

1 mins read
d44e2b8f-e572-4aed-aa3e-8680270736ab
அப்யுக்தா மணிகண்டன். - படம்: ஊடகம்

முன்னணி ஒளிப்பதிவாளர் மணிகண்டனின் மகள் அப்யுக்தா, விஜய் நடிக்கும் ‘கோட்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

அடிப்படையில் நல்ல பரதநாட்டியக் கலைஞரான அப்யுக்தா, ‘மாடலிங்’ துறையிலும் அசத்தி வருகிறார்.

“தற்போது சட்டப்படிப்பு மேற்கொண்டுள்ளார் அப்யுக்தா. இப்போதே நிறைய பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. எனினும், அவர் முதலில் படிப்பை முடிக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.

“இந்நிலையில், விஜய் படத்தில் வாய்ப்பு தேடி வந்தபோது மறுக்க இயலவில்லை,” என்கிறார் மணிகண்டன்.

விஜய் படத்தில் அவரது மகளாக நடிக்கிறாராம் அப்யுக்தா.

திரையுலகில் இவருக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். அந்த வகையில், ‘கோட்’ பட இயக்குநர் வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் இவரது நட்புப் பட்டியலில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்