‘பொன்னியின் செல்வன்’ படம் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா லட்சுமி ‘தக் லைப்’ படத்தில் நடிப்பதற்காக அருமையான மூன்று படங்களை இழந்தேன் என்று கூறியுள்ளார்.
ஐஸ்வர்யா லட்சுமி மலையாளத்தில் அறிமுகமாகி தற்பொழுது தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இந்தப் படத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்பட வேண்டாம் என்பதற்காக பிரேம் குமார் இயக்கி வரும் ‘கார்த்தி 27’ மற்றும் அவரது மனைவி இயக்கவுள்ள புதிய படம், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் புதிய படம் என மூன்று படங்களில் நடிக்காமல் ஐஸ்வர்யா லட்சுமி மறுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

