அனுபமா: எனது ஒவ்வொரு அடியிலும் நீங்கள் இருக்கிறீர்கள்

அனுபமா: எனது ஒவ்வொரு அடியிலும் நீங்கள் இருக்கிறீர்கள்

1 mins read
ecff20b9-964e-4e26-aecb-2ce0e0ca0336
அனுபமா பரமேஸ்வரன். - படம்: ஊடகம்

அண்மையில் பிறந்தநாளைக் கொண்டாடிய அனுபமா என்னுடைய ஒவ்வொரு அடியிலும் ரசிகர்களாகிய நீங்கள் இருக்கிறீர்கள் என்று உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.

ஜெயம் ரவி ஜோடியாக அனுபமா நடித்த ‘சைரன்’ படம் கடந்த வாரம் வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் தன்னுடைய 28வது பிறந்தநாளை அனுபமா கொண்டாடினார். மொரிஷியல் தீவிலிருந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இன்று 28 வயதாகிறது. என் வாழ்க்கையை உருவாக்கியதற்கு நன்றி.

“இன்று என் பிறந்தநாளைக் கொண்டும்போது ஒரு நடிகையாக என் கனவை வாழ்வதற்கான ஒரு தசாப்தமும் முடிகிறது என்பதைக் குறிப்பிடுகிறேன்.

“18 வயதிலிருந்து எனது ஒவ்வோர் அடியிலும் நீங்கள் இருக்கிறீர்கள். எனது பயணத்தில் உயர்வு, தாழ்வு ஆகியவற்றில் உடனிருந்து என்னை உற்சாகம் செய்கிறீர்கள். உங்களின் அன்பும், ஆதரவும் என்னைத் தொடர்ந்து நடத்தும் எரிபொருளாக இருக்கிறது.

“அழகாக வாழ்வதற்கும் தைரியமாக கனவு காண்பதற்கும் இந்த அற்புதமான சாகசத்தைத் தொடர்ந்து பகிர்ந்து கொள்வதற்கும் உடனிருங்கள். என் சிறகுகளுக்குக் கீழே காற்றாக இருப்பதற்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்