‘அமரன்’ படத்திற்கு இரண்டு ‘கிளைமாக்ஸ்’

1 mins read
3fa57cea-6a17-408b-82d2-3f29165e928a
சிவகார்த்திகேயன். - படம்: ஊடகம்

சிவகார்த்திகேயன் அவருடைய 21வது படத்தில் இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் இருப்பதாக கூறுகின்றனர் படக்குழுவினர்.

நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 21வது படமான ‘அமரன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் நாயகியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ராஜ்கமல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90 விழுக்காடு முடிவடைந்த நிலையில் 10 விழுக்காடு படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது என்று கூறுகின்றனர் படக்குழுவினர்.

இந்தப் படத்திற்கு இரண்டு ‘க்ளைமாக்ஸ்’ காட்சிகள் இருப்பதாகவும் முதல் காட்சியை முன்பே படமாக்கி விட்டதாகவும் தற்பொழுது அதன் இரண்டாவது கிளைமாக்ஸ் காட்சிக்காக படப்பிடிப்பு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்