தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரசிகர்கள் தன்னை வெறுக்கும் அளவிற்கு நடித்திருக்கும் சூரி

1 mins read
81e613ce-e64b-47f3-a96b-d4521b017317
‘கொட்டுக்காளி’ படத்தில் சூரி. - படம்: ஊடகம்

கொட்டுக்காளி படத்தில் தன்னுடைய ரசிகர்கள் தன்னை வெறுக்கும் அளவிற்கு வில்லனைப்போல நடித்திருக்கிறாராம் நடிகர் சூரி.

நடிகர் சிவகார்த்திகேயன் நிறுவனமும் ‘தி லிட்டில் வேவ் புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கொட்டுக்காளி’. இதனை ‘கூழாங்கல்’ பட இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார். படத்தில் சூரி, அன்னா பென் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

74வது பெர்லின் திரைப்பட விழாவில் ‘கொட்டுக்காளி’ படத்தை திரையிட்டனர். அங்கு இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்கிறார்கள். மேலும், இந்தப் படத்தில் சூரி வில்லன் சாயல் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் பார்க்கும் அனைவருக்கும் சூரியின் மீது வெறுப்பு உண்டாகும் அளவிற்கு அவரது நடிப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்