தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘நான் எடுத்த முடிவுகளுக்கு இவர்தான் காரணம்’

2 mins read
6baf2f1d-ea07-4e68-a281-874f6d1b121c
மேக்னா, சமந்தா. - படம்: ஊடகம்

சமந்தா தன் தோழி மேக்னாவுடன் மலேசியாவில் இருந்துகொண்டு “நான் எடுத்த முடிவுகளுக்கு இவர்தான்,” காரணம் என்று பதிவிட்டு இருக்கிறார்.

சமந்தாவும் நாக சைதன்யாவும் 2017ல் திருமணம் செய்து 2021ல் பிரிந்தனர். இதற்கு என்ன காரணம் என்பது இதுவரை தெரியாமல் உள்ளது.

சமந்தாவும் – நாக சைதன்யாவும் தனிப்பட்ட காரணங்களால் பிரிந்ததாக எண்ணற்ற செய்திகள் வந்தன. இன்றைக்கும் இந்த இருவர் குறித்த தகவல்கள் ரசிகர்களால் அதிகம் விரும்பிப் படிக்கப்படுகிறது.

திருமணத்திற்குப் பிறகும் சமந்தா, அதிக கவர்ச்சியாக நடித்தது நாக சைதன்யாவிற்கு பிடிக்காததால் இருவரும் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகின. தாயாக வேண்டாம் என்று சமந்த முடிவெடுத்ததும் ஒரு காரணம் என்று கூறப்பட்டது.

சமந்தா தனது மேக்கப் மேன் ப்ரீதம் ஜுகல்கருடன் தொடர்பில் இருந்தார் என்றும் இதனால்தான் விவாகரத்து ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவின.

இந்த வதந்திகள் குறித்து சமந்தா சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டிருந்தார். இதன்பின்னர் இருவரையும் இணைத்து பேசப்பட்ட வதந்திகள் குறைந்தன.

சமந்தாவின் விவாகரத்துக்கு பின்னணியில் ஓர் இளம்பெண் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளன. சமந்தா தனது தோழி மேக்னாவுடன் மலேசியாவில் இருந்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில் “நான் எடுத்த நல்ல முடிவுகளுக்கு இவர்தான் காரணம்,” என்று மேக்னாவை டேக் செய்துள்ளார்.

இதற்கிடையில் அண்மையில் ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த சமந்தா, “என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளை எல்லாம் அறியாமல் இருந்ததுதான் என்னுடைய வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு,” என்றும் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்