தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தாயாகப்போகும் பாலிவுட்டின் முன்னணி நடிகை

1 mins read
806066fe-ea1d-49d1-b47c-2e9fc27b8bd8
ரன்வீர் சிங், தீபிகா படுகோன். - படம்: ஊடகம்

பாலிவுட்டின் முன்னணி நடிகையான தீபிகா படுகோன் தற்பொழுது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோன் ஜோடி, கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு தீபிகா கர்ப்பமாகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

அண்மைய பேட்டி ஒன்றில் பேசிய தீபிகா படுகோன், “எனக்கும் ரன்வீர் சிங்கிற்கும் குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். விரைவில் எங்கள் குழந்தையை நீங்கள் காணலாம்,” என்று இணையத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்