‘தாதா சாகேப் பால்கே அனைத்துலக திரைப்பட விருது ஷாருக்கான் பெற்றதுபோல அதே படத்தில் நடித்த நயன்தாராவிற்கும் நடிகையர் பிரிவில் கிடைத்திருக்கிறது.
மும்பையில் தனியார் அமைப்பு சார்பில் நடைபெற்ற ‘தாதா சாகேப் பால்கே அனைத்துலக திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில், நயன்தாராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் தனியார் அமைப்பு சார்பில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் தாதா சாகேப் பால்கே அனைத்துலக விருது வழங்கப்பட்டு வருகிறது.
நடப்பாண்டுக்கான விருதுகள் நேற்று முன்தினம் வழங்கப்பட்ட நிலையில், பாலிவுட்டைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
இதில் சிறந்த நடிகைக்கான விருது, தமிழ்நாட்டைச் சேர்ந்த அட்லி இயக்கிய ‘ஜவான்’ படத்தில் நடித்த நயன்தாராவிற்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை அப்படத்தின் கதாநாயகன் ஷாருக்கான், நயன்தாராவிடம் வழங்கினார்.
இதனிடையே, பெரும் விவாதம் மற்றும் சர்ச்சைக்குள்ளான ‘அனிமல்’ திரைப்படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிற்கு, சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது.
இப்படத்தில் நடித்த பாபி டியோல் சிறந்த வில்லனுக்கான விருதை தட்டிச் சென்றார்.

