தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சூர்யாவுக்கு சவால்விடும் பாபி தியோலின் உதிரன் கதாபாத்திரம்

1 mins read
f12cf9a1-31f7-4ac7-b2f7-d66c11c2eb47
‘கங்குவா’ படத்தில் தோன்றும் பாபி தியோல். - படம்: ஊடகம்

‘கங்குவா’ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பாபி தியோலின் உதிரன் என்ற கதாபாத்திரம் சூர்யாவிற்கு சவால்விடும் விதமாக இருப்பதாக கூறுகின்றனர் படக்குழுவினர்.

‘அனிமல்’ படத்தில் நாயகன் ரன்பீர் கபூர் அளவுக்கு, அதில் வில்லனாக நடித்த பாபி தியோலின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. நாயகன் யார், வில்லன் யார் என்று பிரித்தறிய முடியாத அளவுக்கு இருவரையும் ரத்தவெறி பிடித்தவர்களாக சித்திரித்திருந்ததும் ஒரு காரணம்.

இதுவரை சூர்யாவின் மிரட்டலான படங்களை வெளியிட்டவர்கள் இரண்டுநாள் முன்பு பாபி தியோலின் பிறந்த நாளை முன்னிட்டு, கங்குவாவில் வரும் அவரது தோற்றத்தை வெளியிட்டனர்.

‘அனிமல்’ படத்தில் வரும் அதே தாடியுடன், ‘கேஜிஎப்’ கருடனைப் போன்ற நீண்ட தலைமுடியுடன் இன்னும் அதிகமான கொடூரத்துடன் அவரது தோற்றம் உள்ளது.

‘கங்குவா’ சூர்யாவுக்கு திரையில் கனத்தப் போட்டியாக பாபி தியோல் இருப்பார் என்பதை இந்த வேடமே சாட்சி. இதில் பாபி தியோலின் கதாபாத்திரத்தின் பெயர் உதிரன்.

ஆயிரம் ஆண்டிற்கு முந்தைய கதைக்களமும் நிகழ்காலமும் ஒருங்கே ‘கங்குவா’வில் இடம் பெறுகிறது. காலத்திற்கேற்ப இருவித வேடங்களில் சூர்யா நடித்துள்ளார்.

ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் ‘கங்குவா’வை தயாரித்து வருகிறது. அந்நிறுவனம் இதுவரை தயாரித்ததில் அதிகப் பொருட்செலவில் உருவாகும் படம் இதுதான். ஜுன் 16 கங்குவா திரைக்கு வருகிறது.

‘அனிமல்’ படத்தில் வில்லனாக நடித்த இவருக்கு சிறந்த வில்லனுக்கான ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்